
அமெரிக்காவுடனான கடும் சண்டையால் பல மேற்காசிய நாடுகளில் சிக்கித் தவித்த 163 மலேசியர்கள் இன்று மலேசியாவின் முதல் வெளியேற்ற விமானத்தில் வீடு திரும்பினர்.
சவுதி அரேபியாவில் உள்ள umrah யாத்ரீகர்களும், கத்தார், ஜோர்டான் மற்றும் சிரியாவில் உள்ள மலேசியர்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
விமான பயண அட்டவணையில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் வான்வெளி மூடல்களால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இன்று அதிகாலை Jeddahவிலிருந்து புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH8503, ஐந்து தாய்லாந்து பிரஜைகள், ஒரு இந்தோனேசியர் மற்றும் மொரொக்கோ நாட்டைச் சேர்ந்த ஏழு குடிமக்கள் அல்லாத குடும்ப உறுப்பினர்களையும் ஏற்றிக்கொண்டு விமானம் மதியம் நண்பகல் மணி 12.32 க்கு KLIA- விமான நிலையம் வந்தடைந்தது.
மதியம் மணி 1.45க்கு விமான நிலையத்தின் முதலாவது முனையத்தின் மண்டபத்திலிருந்து வெளியேறிய பயணிகளை அவர்களது உறவினர்கள் வரவேற்றனர் .
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் உத்தரவின் பேரில் மலேசியர்களை வீட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தேசிய பாதுகாப்பு மன்றத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
Airbus A330-300 செவ்வாய்க்கிழமை மாலை மணி 4.10 க்கு KLIA-விலிருந்து புறப்பட்டு உள்ளூர் நேரப்படி இரவு 8.35 மணிக்கு Jeddahவில் உள்ள மன்னர் Abdulaziz அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானம் மலேசியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு, Jeddahவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் பயணிகளை ஏற்றிச் செல்ல ஒரு குறுகிய நேரத்தை மட்டுமே அனுமதித்தனர்.



