Latestமலேசியா

மேற்காசியாவிலிருந்து மலேசியர்களை தாயகத்திற்கு கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை

கோலாலம்பூர், ஏப் 18 – மேற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக அங்குள்ள மலேசிய மாணவர்கள் உட்பட மலேசியர்களை தாயகத்திற்கு கொண்டுவருவதற்கான அவசியம் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்காசியாவில் நிலைத்தன்மை நீடிப்பதால் அங்கு வருகை புரிவது பாதுகாப்பானதாக இருப்பதாக கருதப்படுவதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவசர நிலை ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கும் செயல்முறை திடடத்திற்காக ஈரான், ஈராக் ,Jordan மற்றும் Lebanon ஆகிய நாடுகளில் கவனம் செலுத்தும் சிறப்பு நடவடிக்கை அறையை வெளியுறவு அமைச்சு அமைத்துள்ளது.

மேற்காசியாவின் நிலைமையை அவ்வப்போது கண்காணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்காசிய நாடுகளில் இருந்துவரும் மற்றும் அங்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள மலேசியர்கள் எப்போதும் விழிப்பாக இருப்பதோடு நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வரும்படி வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசாங்கம் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டியை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். மேற்காசிய நாடுகளில் உள்ள மலேசியர்கள் அங்குள்ள மலேசிய தூதரகத்திடம் தங்களது பெயர்களை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எந்தவொரு அவசர நெருக்கடியிலும் அவர்களுடன் தூதரகம் தொடர்பு கொள்வதற்கு இது வசதியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!