Latestமலேசியா

மோட்டார் சைக்கிளோட்டி ரவிக்கு வழங்கிய RM1.2 மில்லியன் இழப்பீடு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஈப்போ, ஜூலை 18  – கவனக்குறைவு அல்லது அலட்சியமாக வாகனம் செலுத்தியது தொடர்பான  வழக்கு ஒன்றில்  மோட்டார் சைக்கிளோட்டி ரவி என்பவருக்கு   செஷன்ஸ் நீதிமன்றம்  வழங்கிய  1.2 மில்லியன் இழப்பிடு தொகையை   உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த இழப்பீடு  கோரிக்கை மீதான சம்பவத்தில் மோசடி  நிகழ்ந்திருப்பதாகவும்  விசாரணை நீதிபதி தமக்கு தெரிவிக்கப்பட்ட நேரடி சாட்சியத்தில்   பல அம்சங்களை  பரிசீலிக்க  தவறிவிட்டதாக   நீதிபதி  அப்துல் வஹாப்  முகமட்  (  Abdul  Wahab  Mohamad )  தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த வழக்கின் வாதியான விபத்திற்குள்ளான  எல்.ரவி  சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் குறித்த அம்சங்களை  விசாரணை நீதிபதி  முழுமையாக கவனத்தில் எடுத்துக்கொள்ள தவறிவிட்டார்.   அந்த விபத்து குறித்த போலீஸ் புகாரும்  திரித்துக்  கூறப்பட்டதாக  இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

குறிப்பாக அவர் ஓட்டிச் சென்ற  மோட்டார் சைக்கிளின் பின்புற பகுதியில்   பாதிப்பு எதுவும்  ஏற்படவில்லை என்பது போலீஸ் வழங்கிய புகைப்படத்தில்  தெரிகிறது.  தனது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் கார் மோதியதாக  ரவி தனது இழப்பிடு வழக்கு மனுவில் கோரியிருந்தார்.  அவர் தனியாக  சென்றபோது   சாலையில்  வழுக்கி  விழுந்துள்ளார். மேலும்  ரவி மதுபானம் அருந்திவிட்டு  மோட்டார் சைக்கிள் ஓட்டியுள்ளார். 

விசாரணை நீதிபதி இதனையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள தவறிவிட்டார் என   லிபர்ட்டி  ஜெனரல்  இன்சுரன்ஸ் பெர்ஹாட் (Liberty General Insurance Bhd) காப்புறுதி நிறுவனத்தின்  மேல்முறையீட்டை   அனுமதித்தபோது  நீதிபதி  வஹாப் தெரிவித்தார். 

கார் ஓட்டுனர்  குணாளன்(Gunalan),   அந்த காருக்கு  லிபர்ட்டி நிறுவனத்தில் காப்புறுதி எடுத்திருந்த  அக்காரின்  உரிமையாளர் வாசுதேவன் (Yesu Steven)  ஆகியோருக்கு சாதகமாக  உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

கடந்த  2016ஆம் ஆண்டு  மாலை 6.30 மணியளவில் Jalan Ipoh – Kuala Lumpur  சாலையின்   57 ஆவது கிலோமீட்டரில்  குணாளன் ஓட்டிய கார் மோதியதில்  உடலுக்கு  கீழே செயல் இழந்த ரவிக்கு    1.24 மில்லியன் ரிங்கிட்  இழப்பீடும் மற்றும்    44,000 ரிங்கிட் செலவுத் தொகையும்  வழங்கும்படி லிபர்ட்டி காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக  கடந்த ஆண்டு  செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!