
அலோர் ஸ்டார், அக்டோபர்-13,கெடா, கூருணில் மோட்டார் சைக்கிள் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்ட 18 வயது இளைஞர், இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
அக்டோபர் 5ஆம் தேதி, பெண்டாங்கில் பிடிக்கப்பட்ட அந்த இளைஞர், சந்தேக நபர் ஒருவரின் வீட்டிற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
அங்கு அவர் இரண்டு நாட்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதுடன், அவரது தலைமுடியும் வெட்டப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்த இளைஞரின் சடலம், பின்னர் கூருண், ஜாலான் ஹார்வர்ட் சாலையோரத்தில் வீசப்பட்டுள்ளது.
உடற்கூறு பரிசோதனையில், தலையில் பலமான பொருளால் தாக்கப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 14 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக கெடா போலீஸ் தலைவர் டத்தோ Adzli Abu Shah தெரிவித்தார்.
கைதானவர்களில் இருவர் பதின்ம வயது சிறுவர்கள் ஆவர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்த குற்றச்சாட்டே இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.



