Latestஉலகம்

மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து கால்பந்து வீரர் உயிரிழப்பு

ஸ்பெயின், நவம்பர் 4 – டெனெரிஃப் (Tenerife) கால்பந்து அணியின் வீரர் ஜீசஸ் டி மிகுவல் (Jesus de Miguel), மைதானத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தனது 30 வயதில் உயிரிழந்தார்.

அண்டோரா (Andorra) அணிக்கு எதிரான போட்டியின்போது, எதிரணி கோல்காப்பாளர் ஜீசஸ் ஓவோனோ (Jesus Owono) பந்தைத் தடுக்க முயன்றபோது அவரது முழங்கால் டி மிகுவலின் மார்பில் மோதியது. இதில் மயங்கி விழுந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்பெயின் காவல்துறை கவனக்குறைவால் மரணம் ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், டி மிகுவலின் மறைவுக்கு பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட கால்பந்து அணிகள் இரங்கல் தெரிவித்துள்ளன. மேலும், ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த அனைத்து கால்பந்துப் போட்டிகளையும் ஒத்திவைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!