சிப்பாங், ஏப் 1 – சிலாங்கூர் Bandar Saujana Putraவில் ரகசிய அறையில் மறைந்து வைக்கப்பட்டிருந்த கடத்திவரப்பட்ட பல்வேறு வகைகளைக் கொண்ட போட்டல்களில் அடைக்கப்பட்ட 1,362 லிட்டர் மதுபானங்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மார்ச் 14 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையில் 69,400 ரிங்கிட் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறையின் மத்திய மண்டலப் பிரிவின் துணை இயக்குனர் Norlela Ismail தெரிவித்தார். இரவு 8மணியளவில் அந்த பரிசோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களுக்கான சுங்க வரி 86,200 ரிங்கிட்டாகும்.
சட்டப்பூர்வமான மதுபானங்களை விநியோகிப்பதற்கும் அவற்றை பாதுகாப்பா வைத்திருக்கும் கிடங்காக அந்த இடம் பயன்படுத்தப்பட்டதாக தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்குள்ள ரகசிய அறையில் வரி செலுத்தப்படாத மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மதுபானத்தில் சட்டப்பூர்வமானது என்பதை தெரிவிக்கும் 800 போலி முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தாக Norlela Ismail தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.