ரிடுவானுக்கு I- Sara உதவி இந்திரா காந்தி வழக்கு மீண்டும் போலீஸ் கவனத்திற்கு வந்துள்ளது

புத்ரா ஜெயா, நவ 10 – இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான Muhammad Riduan Abdullah எங்கு இருக்கிறார் என்பதை கண்டுப்பிடிப்பதற்கு போலீசார் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என உள்துறை அமைச்சர் சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
i-Sara ரொக்க உதவித் தொகையான 100 ரிங்கிட்டை Muhammad Riduan Abdullah பெற்றிருக்கக்கூடும் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்திரா காந்தியின் குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து போலீசார் ஆராய்வார்கள் என சைபுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதால் அதிகாரப்பூர்வ வழியில் இந்த கூற்றை சரிபார்க்க தகவலை உறுதிப்படுத்தும்படி போலீஸ் துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிடிபடாமல் இருந்துவரும் Muhammad Riduan , i-sara ரொக்கப் பணத்துடன் இணைக்கப்பட்ட அரசாங்க தரவுத்தளங்களில் எவ்வாறு தோன்ற முடியும் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
I-sara முயற்சி மலேசியர்களின் அடையாள அட்டைகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் ஒரு முறை 100 ரிங்கிட் ரொக்க உதவியை வழங்குகிறது.
கூற்று சரிபார்க்கப்பட்டால், அது ரிடுவானின் நிதி அல்லது இருப்பிட விவரங்களை அதிகாரிகள் கண்டறிய உதவும் என்பதோடு , இது நீண்டகால தேடலில் ஒரு திருப்புமுனையை வழங்கும்.
மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் விரிவான போலீஸ் விளக்கத்தை கேட்டுள்ளதாக சைபுடின் கூறினார்.
உலக மனித கடத்தல் எதிர்ப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசியோது அவர் இதனைத் தெரிவித்தார்.



