Latestமலேசியா

ரெம்பாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்; 74 வயது முதியவர் உயிரிழப்பு

சிரம்பான், அக்டோபர்-30,நெகிரி செம்பிலான், ரெம்பாவில் வெள்ள நீரில் கார் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், 74 வயது முதியவர் உயிரிழந்தார்.

நேற்றிரவு Kampung Kundur Hulu ஆற்றுக்கு அருகிலுள்ள சாலையில், அவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி கார் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இரவு 9.20 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் மகனிடமிருந்து அவசர அழைப்பு கிடைத்ததாக ரெம்பாவ் தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார்.

சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காருக்குள் சிக்கியிருந்த முதியவரை மீட்புக் குழுவினர் வெளியே கொண்டுவந்தனர்.

எனினும், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதனிடையே, பெடாஸில் ஏற்பட்ட மற்றொரு திடீர் வெள்ளச் சம்பவத்தில், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 38 வயது இந்தோனேசிய ஆடவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!