
லக்னோ, மார்ச்-4-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காணாமல் போன 38 வயது ஆடவர், ஒரு சைவ பிரியாணி கடையின் குளிர்ப்பதனப் பெட்டியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை மதியம் காணாமல் போன அவர், மறுநாள் காலை, ஒரு கல்லூரி எதிரே அமைந்திருந்த அந்த தற்காலிக கடையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரது உடமைகள் மூலம் குடும்பத்தார் சடலத்தை அடையாளம் கண்டனர்.
உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால் செருப்புகள் வைக்கப்பட்ட விதம் சந்தேகத்தை எழுப்பியுள்ளதால், போலீசார் வழக்கை சந்தேகத்திற்குரியதாகக் கருதி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய உடல் சவப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரியாணி கடையின் குளிர்ப்பதன பெட்டியில், காணாமல் போன மனிதர் கண்டுபிடிக்கப்பட்ட இச்சம்பவம், உள்ளூர் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதோடு, பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.



