Latestமலேசியா

வணக்கம் மலேசியாவின் மாணவர் முழக்கம் 2026: 24 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்!

கோலாலம்பூர், அக்டோபர் 26 – வணக்கம் மலேசியாவின் ‘மாணவர் முழக்கம் 2026’ பேச்சுப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் பங்கேற்ற 96 மாணவர்களில், 24 பேர் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.

தொடக்கத்தில் 20 மாணவர்களை மட்டுமே தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மாணவர்கள் வெளிப்படுத்திய சிறப்பான பேச்சாற்றல் மற்றும் வாதத்திறனைக் கருத்தில் கொண்டு, மேலும் நால்வருக்கு வாய்ப்பளித்து, அந்த எண்ணிக்கையை நடுவர்கள் 24 ஆக உயர்த்தியுள்ளனர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேச்சாற்றலை வெளிக்கொணரும் இப்போட்டி 14-வது ஆண்டாக நடைபெறும் நிலையில், இதன் காலிறுதிச் சுற்று கடந்த அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இணையவழியாக நடைபெற்றது.

இவ்வாண்டு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் பேச்சுக் காணொளிகளை அனுப்பியிருந்தனர். அவர்களில் தேர்வான 96 மாணவர்கள் காலிறுதியில் களமிறங்கி, பல்வேறு தலைப்புகளில் தங்களின் சிந்தனைத் திறனையும் கருத்துகளையும் முன்வைத்தனர்.

2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாணவர் முழக்கம், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் மேடையேறவும் தமிழில் தங்கள் கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தவும் தொடர்ந்து களம் அமைத்துக் கொடுத்து வருகிறது.

இவ்வருட போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றிய முனைவர் ரஹீம் கமலுதீன் மற்றும் கனல்வீரன் ராஜேந்திரன் ஆகியோர், மாணவர்களின் பேச்சாற்றல், கருத்துத் தெளிவு மற்றும் வாதத்திறனை நுணுக்கமாக மதிப்பிட்டு, அடுத்த சுற்றுக்கான போட்டியாளர்களைத் தேர்வு செய்தனர்.

இதோ இவர்கள்தான், அரையிறுதிக்கு முன்னேறியுள்ள அந்த 24 இளம் பேச்சாளர்கள்…

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமியும் கலந்து கொண்டார். வணக்கம் மலேசியாவின் செய்திப் பிரிவுத் தலைவர் வேதகுமாரி வெங்கடேசன் மற்றும் செய்தி வாசிப்பாளர் சுகந்தன் ஆகியோர் நிகழ்ச்சியை வழிநடத்தினர்.

நவம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறள அரையிறுதிச் சுற்றில் பங்கேற்கவுள்ள இந்த 24 இளம் பேச்சாளர்களுக்கும் வாழ்த்துகள்!

மாணவர் முழக்கம் 2026 குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளுக்கு தொடர்ந்து வணக்கம் மலேசியாவுடன் இணைந்திருங்கள்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!