
கிள்ளான், மே-7-சிலாங்கூரில் சுமார் 556,000 ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோத மதுபானங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 2 இந்தியப் பிரஜைகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஒரு தொழிற்சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த கொல்கலன் லாரியை போலீஸார் அதிரடியாகச் சோதனையிட்டனர்.
அப்போது, இறக்குமதி வரி செலுத்தப்படாத ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மதுபானப் பாட்டில்கள் மற்றும் பீர் வகைகள் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைதுச் செய்யப்பட்ட 30 முதல் 45 வயதுடைய அந்த இரண்டு நபர்களும், உள்ளூர் கேளிக்கை விடுதிகளுக்கு இந்த மதுபானங்களை விநியோகிக்கும் கும்பலின் போக்குவரத்து உதவியாளர்களாகச் செயல்பட்டது தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது அந்த இருவரிடமும் சுங்கச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கடத்தல் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களையும், மதுபானங்களைப் பாதுகாத்து வைத்திருந்த கிடங்கையும் கண்டறிய போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவ்வாண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.



