
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – விளையாட்டில் ஆர்வமுள்ள இளம் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஓர் அருமையான வாய்ப்பு! வள்ளுவர் விழா 2026 – பள்ளி மாணவர்களுக்கான நட்புமுறை பூப்பந்துப் போட்டி வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
காலை 8 மணி முதல் தொடங்கும் இப்போட்டியில், ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
9 முதல் 12 வயதுப் பிரிவில் ஆண், பெண் இருபாலருக்கும் ஒற்றையர் போட்டிகள் நடைபெறும் நிலையில்,13 முதல் 15 மற்றும் 16 முதல் 19 வயதுடைய இரு பிரிவுகளிலும், ஆண்களுக்கு இரட்டையர் போட்டிகளும், பெண்களுக்கு ஒற்றையர் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.
மேலும், பங்கேற்புக் கட்டணமாக ஒற்றையர் பிரிவுக்கு ஒருவருக்கு RM20-உம், இரட்டையர் அணிக்கு RM40-உம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இதனிடையே, இளம் மாணவர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் இப்போட்டியில் இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து தங்கள் இடத்தை உறுதி செய்துகொள்ளுமாறு வள்ளுவர் விழா ஏற்பாட்டுக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
போட்டி தொடர்பான மேல் விவரங்களுக்கு தசரதனை 016-2942033 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
பதிவுக்கு / For Registration: https://forms.gle/bCt4msknoRHQn6Tu8
Scan the QR code in the poster/template



