Latestமலேசியா

வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டும் PERKESO: குவாந்தானில் ஆகஸ்ட் 2-ல் 6,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளுடன் MYFutureJobs கார்னிவல்

கோலாலாம்பூர், ஜூலை-30 – வேலையின்றித் தவிக்கும் ஒவ்வொருவருக்கும், ஒரு நல்ல வேலை வாய்ப்பு என்பது வெறும் வருமானம் மட்டுமல்ல; அது அவர்களின் குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தின் ஒளி.

அப்படிப்பட்ட நம்பிக்கைக் கரத்தை நீட்டி, வாழ்வாதாரத்திற்குத் துணையாக நிற்கிறது சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO.

PERKESO-வின் Lindung Kerjaya முயற்சியின் கீழ், வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி, குவாந்தான் சுல்தான் அஹ்மாட் ஷா மாநாட்டு மையத்தில் பிரம்மாண்டமான ‘MYFutureJobs’ வேலைவாய்ப்புக் கர்னிவல் 2026 நடைபெறவுள்ளது.

ஒரே நாளில், 10-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த 30 முதலாளிகள் நேரடியாகப் பங்கேற்று, 6,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்க காத்திருக்கின்றனர்.

மாதச் சம்பளம் 10,000 ரிங்கிட் வரை அளிக்கப்படும் இந்த வேலைவாய்ப்புச் சந்தை, வெறும் வேலைவாய்ப்பை மட்டும் வழங்காமல், சவாலான காலக்கட்டத்தில் உழைக்கும் மக்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பையும் நிம்மதியையும் உறுதிச் செய்கிறது.

பஹாங் மாநில மக்களின் எதிர்காலத்தைக் கட்டமைக்கப் PERKESO எடுத்துள்ள இந்த நெகிழ்ச்சியான முயற்சிக்கு, myfuturejobs.gov.my/careerfair எனும் இணையதளத்தின் வாயிலாகப் பொது மக்கள் உடனே பதிவு செய்துகொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!