Latestமலேசியா

வீட்டு வாசலில் கோர விபத்து: காரின் அடியில் சிக்கிய பெண் – தீயணைப்புப் படையினர் மீட்பு

ஈப்போ, ஜூலை-6 – வீட்டின் வேலிக் கதவைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் சிக்கித் தவித்த சம்பவம் பேராக் ஈப்போவில் பதிவாகியுள்ளது.

 

இயந்திரம் நிறுத்தப்படாத அவரின் Proton Wira கார் எதிர்பாராதவிதமாக நகர்ந்ததால், 38 வயது அவர் வாகனத்திற்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

 

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், துரிதமாகச் செயல்பட்டு காரை உயர்த்தி அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

 

காயமடைந்த அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

 

தற்போது சிகிச்சையில் இருக்கும் அப்பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!