Latestமலேசியா

நிலக்கடலைச் சட்னிக்காகத் தீராத பகை: மாற்றுத்திறனாளி சகோதரியைக் கொன்ற சகோதரி கைது

ஜகார்த்தா, ஜூலை-5-இந்தோனேசியாவில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், உணவுத் தகராறு காரணமாக மூத்தச் சகோதரி தனது மாற்றுத்திறனாளி தங்கையைக் கொலைச் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

47 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட Choiriyah என்பவர், தனது 61 வயது மூத்த சகோதரி Suparni என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

வெறும் ஒரு கிலோ ‘pecal’ எனப்படும் நிலக்கடலைச் சட்னியை தங்கை சாப்பிட்டு முடித்ததால் ஆத்திரமடைந்த அக்காள், அவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

கைகளாலும், துடைப்பக் கட்டையாலும் தாக்கி, சுவரில் தலை மோதியதில் தங்கை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைச் சாதாரண விபத்து என்று மறைக்க முயன்ற அக்காள், போலீஸின் தீவிர விசாரணையில் சிக்கினார்.

கடந்த சில காலங்களாகவே, தங்கையின் நடத்தையால் விரக்தியில் இருந்ததாக அக்காள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வதில் உள்ள சவால்களும், குடும்பத்தினரிடையே நிலவும் பொறுமையின்மையும் இத்தகைய விபரீதங்களுக்கு இட்டுச் செல்வதாகப் போலீஸ் கூறியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் உள்ளூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!