Latestஉலகம்

வெனிசுலாவை மீண்டும் உலுக்கிய 4.9 ரிக்டர் அளவிலான நில அதிர்வு

கராகாஸ், ஜூன்-27-லத்தின் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக் கடலோரப் பகுதியில், ரிக்டர் அளவைக் கருவியில் 4.9-தாக பதிவான மற்றுமொரு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட இந்த அதிர்வுகள், தலைநகர் கராரகாஸ் (Caracas) மற்றும் மராகாய் (Maracay) உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலமாக உணரப்பட்டதாக ஐரோப்பிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் (EMSC) தெரிவித்தது.

​கடந்த புதன்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த இரட்டை நிலநடுக்கங்களின் பேரழிவிலிருந்து மீள்வதற்குள், இந்த புதிய அதிர்வு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

முந்தைய நிலநடுக்கங்களால் பலவீனமடைந்துள்ள கட்டடங்கள், இந்த தொடர் அதிர்வுகளால் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

​இதற்கிடையே, முந்தைய நிலநடுக்கப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 920 ஆக அதிகரித்துள்ளது.

மீட்புப் பணிகள் மிகக் கடுமையான சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளை, பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!