Latestமலேசியா

வெளிநாட்டினரை மிரட்டினர் 2 போலீஸ்காரர்கள் பணி நீக்கம்

கோலாலம்பூர், ஆக 2 – ஜாலான் தாமிங் ஸ்ரீ காஜாங்கில் வெளிநாட்டினரை மிரட்டி பணம் கேட்டது தொடர்பான காணொளி வைரலானதை தொடர்ந்து இரண்டு போலிஸ்காரர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த இரண்டு போலீஸ்காரர்களுக்கும் எதிராக இன்று காலை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டதை தொடர்ந்து தொடக்கக் கட்டமாக அவர்கள் மீது அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காஜாங் போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் அப்துல் யூசோப் ( Naazron Abdul Yusof ) தெரிவித்தார்.

அவர்களுக்கு எதிரான புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை மற்றும் விசாரணையும் தொடங்கப்பட்டுவிட்டது. ஒழுங்கு விசாரணைக்குப் பின் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என நஸ்ரோன் கூறினார். வெளிநாட்டினரை மிரட்டும் காணொளி வைரலானதை தொடர்ந்து காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதாக இதற்கு முன் ஊடகங்களில் தகவல் வெளியாகியது. தண்டனைச் சட்டத்தின் 384 ஆவது விதியின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கியிருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் உசேய்ன் ஒமார் கான் (Hussein Omar Khan ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!