
புத்ராஜெயா, டிசம்பர் 18-மனிதவள அமைச்சான KESUMA, வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருப்பதை குறைக்கும் நோக்கில், வேலைவாய்ப்பு இல்லாத இந்தியர்களுக்கு பயிற்சி அளித்து, உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதனைத் தெரிவித்தார்.
உணவகங்கள், முடிதிருத்தங்கள் மற்றும் பொற்கொல்லர் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, HRD Corp எனப்படும் மனிதவள மேம்பாட்டுக் கழகம் போன்ற அமைப்புகள் நிதி மற்றும் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளன.
இந்நிலையில், திறன் மேம்பாட்டை வேலைவாய்ப்புக்கான பாதையாகவும், பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பாகவும் மாற்ற அமைச்சு சரியான இடத்தில் உள்ளதாக ரமணன் சொன்னார்.
இந்த முயற்சி, உள்ளூர் சமூகத்திற்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.



