Latestமலேசியா

வைரலான சிரிப்பின் பின்னால் வறுமை போராட்டம்; 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மீம்ஸ் பையன் அருண் குமார்

ஹைதராபாத், ஜூன்-7-சமூக ஊடகங்களில் தனது எதார்த்தமான சிரிப்பால் ஆக்கிரமித்த ‘வைரல் மீம் பாய்’ அருண் குமாரின் அசாத்திய நிஜ வாழ்க்கை வெற்றிக் கதை, தற்போது இணையத்தில் பலருக்கும் பெரும் உத்வேகத்தை அளித்து வருகிறது.

தென்னிந்திய மாநிலம் தெலங்கானாவில், வறுமைக் காரணமாகத் தனது 10 வயதிலேயே நான்காம் வகுப்போடு படிப்பைக் கைவிட்ட அருண் குமார், லாரி உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

அப்போது இவரின் எதார்த்தமான சிரிப்பை லாரி ஓட்டுநரான நேரு வீடியோவாகப் பதிவிட, அது உலகளவில் வைரலானது.

கோடிக்கணக்கானோர் பாராட்டிய அந்தக் கருத்துகளை வாசிக்கக் கூட அருண் குமாருக்குப் படிப்பறிவில்லை.

இதனை உணர்ந்த லாரி ஓட்டுநர் நேரு, தனது லாரி கேபினையே ஒரு நடமாடும் வகுப்பறையாக மாற்றி, பயணங்களுக்கு இடையே அருண் குமாருக்கு எழுத்துகளையும் கணிதத்தையும் கற்றுக் கொடுத்தார்.

நேருவின் வழிகாட்டுதலாலும், தனது விடாமுயற்சியாலும், வறுமையைத் தாண்டி அண்மையில் வெளியான 2026-ஆம் ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அருண் குமார் மிகச் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

வெறும் 15 வினாடி மீம் பையனாக இருந்த அருண் குமார், இன்று முறையான கல்வியைப் பெற்றுப் பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

ஒரு நல்ல வழிகாட்டியும், விடாமுயற்சியும் இருந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும் நமது விதியை மாற்றி எழுதலாம் என்பதற்கு இவர்களின் கூட்டு முயற்சியே சான்றாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!