
ஷா ஆலம், செப்டம்பர் 4 – தாமான் ஆலம் மெகாவில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நடந்த மோதலில் 23 வயது கணேசன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு சகோதரர்கள் உட்பட 8 பேர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அந்த 8 பேரும் குற்றச்சாட்டைப் புரிந்துகொண்டதாகத் தெரிவித்த நிலையில் இவ்வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்குட்பட்டதால், குற்ற ஒப்புதல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
சட்டவிரோதமாகக் கூடிய குழுவில் இணைந்து கணேசனை கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிணை வழங்க மறுத்து, வழக்கை அக்டோபர் 13ஆம் தேதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த மோதல் இரு கும்பல்களுக்கு இடையிலான பகை மற்றும் பகுதிப் போட்டியால் ஏற்பட்டிருக்கலாமென காவல்துறை தெரிவித்துள்ளது.



