ஷா ஆலாம், ஏப்ரல் 22 – சிலாங்கூர், ஷா ஆலாம், கோத்தா கெமினிங்கிலுள்ள, தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட நைட்ரஜன் வாயு வெடிப்புச் சம்பவத்தில் மூன்று தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
அம்மூவரும், 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
இன்று காலை மணி 10.14 வாக்கில், அந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததை, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் உறுதிப்படுத்தினார்.
பாதுகாப்பை உறுதிச் செய்ய ஹஸ்மத் எனும் அபாயகர இரசாயன பொருட்களை கண்டறியும் சிறப்புக் குழுவும், சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக முக்லீஸ் சொன்னார்.
தொழிற்சாலை ஊழியர்கள், காற்றதழுத்ததை கண்டறியும் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வெடிப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த வெடிப்பில், தொழிற்சாலை கட்டடத்திற்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை.