
கோலாலம்பூர், மார்ச்-23-கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி வரும் நெடுஞ்சாலை போக்குவரத்து இன்று காலை முதலே சுமூகமாகவும் சீராக உள்ளது.
எனினும், ஹரி ராயா விடுமுறை முடிந்து ஏராளமான மாநகரவாசிகள் வீடு திரும்புவதால், நண்பகல் தொடங்கி பரபரப்பு அதிகரிக்கும் என, மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM கூறியது.
காலையில் வடக்கே, பீடோர் முதல் தாப்பா வரையில் மட்டும் PLUS நெடுஞ்சாலையில் சற்று நெரிசல் ஏற்பட்டதாக அது கூறியது.
எது எப்படி இருப்பினும், போக்குவரத்தை சுமூகமாக்க, காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை 30 இடங்களில் Smart Lane பாதைகளை PLUS திறந்துள்ளது.
வாகனமோட்டிகள், அந்தந்த நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பயண ஆலோசனை அட்டவணையைப் பின்பற்றுமாறும், போதிய ஓய்வுக்குப் பிறகு பயணத்தை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹரி ராயாவுக்கு, வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை 4 நாட்களுக்கு மலேசியர்கள் நீண்ட வார இறுதி விடுமுறையை அனுபவிக்கிறனர்.



