பாட்னா, ஜூலை 30 – இந்தியா, ஜார்கண்ட் மாநிலத்தில், விரைவு இரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், குறைந்தது இருவர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
கிழக்கு ஜார்கண்ட் மாநிலத்தின், ஜாம்ஷெட்ப்பூர் அருகே, உள்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை மணி நான்கு வாக்கில், அவ்விபத்து நிகழ்ந்தது.
எதிரே வந்த சரக்கு இரயில் ஒன்று, பயணிகளை ஏற்றி இருந்த ஹவுரா – மும்பை எக்ஸ்பிரஸ் இரயிலை மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
அதனால், அதன் 18 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிய வேளை ; பாதிக்கப்பட்டவர்களை தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன.