Latestஉலகம்

ஹெலிகாப்டர் விபத்து ; ஈரானிய அதிபர், வெளியுறவு அமைச்சர் உட்பட அனைத்து பயணிகளும் பலி

தெஹ்ரான், மே 20 – ஈரானின் வடமேற்கு மலைப்பகுதியில், ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.

அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பகுதியில் இருந்து, இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போன அந்த ஹெலிகாப்டர் பின்னர் முழுவதுமாக எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக, ஈரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல் போன ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டு விட்ட போதிலும், அதில் பயணித்த ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உட்பட அனைத்து பயணிகளும் பலியாகிவிட்டதாக தேடி மீட்கும் குழுவின் தொடக்க கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அந்த செய்தி கூறுகிறது.

அதனால், மோப்ப நாய்களுடன் 73 தேடி மீட்கும் குழுகளை சேர்ந்தவர்கள்,சம்பவ இடத்தை முற்றிகையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், அடை மழை மற்றும் மூடுபனியால் தேடி மீட்கும் பணிகள் சுணக்கமடையலாம் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈரானிய அதிபரையும், வெளியுறவு அமைச்சரையும் ஏற்றியிருந்த அந்த ஹெலிகாப்டர், அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!