Latestமலேசியா

உலக உடல் கட்டழகர் போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஷாருல் ஓய்வு

கோலாலம்பூர், மார்ச் 19 – உடல் கட்டழகர் போட்டியில் ஆறு முறை உலக சாம்பியன் விருதை வென்ற Syarul Azman Mahen Abdullah ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறார். தமக்கு 50 வயதாகி விட்டதால் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் உடல் கட்டழகர் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவிருப்பதை அவர் இன்று தெரிவித்தார். இருப்பினும் விளையாட்டாளர்களின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரப்போவதாக Sharul கூறினார். தகுதிபெற்ற தேசிய விளையாட்டாளர்களுக்காக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை அவர் கேட்டுக்கொண்டார். விளையாட்டுத்துறையிலிருந்து ஓய்வு பெற்ற தகுதி பெற்ற விளையாட்டாளர்களுக்கு அவர்களது நிதிச் சுமைக்கு ஓய்வூதிய திட்டம் உதவியாக இருக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

குறைந்தபட்சம் இரண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டாளர்கள் ஓய்வூதியத்திற்காக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று Sharul பரிந்துரைத்தார். ஒலிம்பிக் அல்லாத விளையாட்டு வீரர்களுக்கும் ஓய்வூதிய தொகை நீட்டிக்கப்பட வேண்டும். நாடு பல உலக சாம்பியன்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் மாதாந்திர ஒலிம்பிக் நிரந்தர ஊக்குவிப்புத் திட்ட உதவித்தொகையாக தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு 5,000 ரிங்கிட்டும். வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 3,000 ரிங்கிட்டும். வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 2,000 ரிங்கிட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!