Latestமலேசியா

அக்டோபர் 12 முதல், 17 மூத்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

கோலாலம்பூர், செப்டம்பர் 11 – மலேசியக் காவல்துறை 17 உயர் அதிகாரிகளின் இடமாற்றங்களை அறிவித்துள்ளது. இவ்விடமாற்றங்கள் அனைத்தும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென காவல்துறைச் செயலாளர் டத்தோ முகமட் நோர் யூசோப் அலி (Datuk Mohamad Noor Yusof Ali) தெரிவித்தார்.

உள்துறை அமைச்சின் குற்றத் தடுப்பு வாரிய உறுப்பினர் டத்தோ அகமட் தஸாஃபிர் முகமட் யூசோப் (Datuk Ahmad Dzaffir Mohd Yussof), புக்கிட் அமான் காவல்துறைத் தலைவர் செயலகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பேற்கிறார். அதேவேளையில், பேராக் உலு கிந்தாவில் உள்ள 69 கமாண்டோ சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் தளபதி SAC ஹம்சா ஹாஷிம் (Hamzah Hashim), பெர்லிஸ் மாநிலக் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் முறையே CP மற்றும் DCP பதவிகள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளன.

கிளந்தான் சிறப்புப் பிரிவுத் தலைவர் SAC அஸ்லி அமின் (SAC Azli Amin), புக்கிட் அமான் சிறப்புப் பிரிவின் E5 முதன்மை உதவி இயக்குநராகவும், சிலாங்கூர் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறைத் தலைவர் SAC முகமட் மாஷ்டிக் யஹ்யா (SAC Mohammad Mashdik Yahya), புக்கிட் அமான் காவல்துறைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் DCP பதவி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, செராஸ் மத்தியப் படைப்பிரிவின் 69 கமாண்டோ பிரிவைச் சேர்ந்த SAC ஹகேமால் ஹவாரி (SAC Hakemal Hawari), புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் பொது காவல் மற்றும் பேரிடர் நெருக்கடி பிரிவின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் முதன்மை உதவி இயக்குநர் ACP அகமட் அஸ்வான் அமின் நோர்டின் (ACP Ahmad Azwan Amin Nordin), டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவராகவும், கோலாலம்பூர் காவல்துறைப் பயிற்சிக் கல்லூரியின் தடயவியல் அறிவியல் மற்றும் DNA விரிவுரையாளர் சூப்பரின்தென்டன் அனுவார் பக்ரி அப்துல் சலாம் (Supt Anuar Bakri Abdul Salam), செந்தூல் மாவட்டக் காவல்துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனுவார் பக்ரிக்கு ACP பதவி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!