Latestமலேசியா

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கு ஒட்டுமொத்தத் தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

ஷா ஆலாம், அக்டோபர்-31-அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு JMB நிர்வாகக் குழுக்கள் முழுமையான தடை விதிக்க முடியாது என ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேசிய முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை நோராசீலா காலிட், தனது வீட்டில் 3 பூனைகளை வளர்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

செல்லப் பிராணிகளை வளர்ப்பது மட்டுமே குடியிருப்பு விதிமீறலாகக் கருத முடியாது என நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.

தவிர, செல்லப் பிராணிகளால் மற்ற குடியிருப்பாளர்களுக்குத் தொந்தரவு அல்லது ஆபத்து ஏற்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

நோராசீலாவின் பூனைகள் தொந்தரவு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்தத் தீர்ப்பு, செல்லப் பிராணிகளைப் பொறுப்புடன் வளர்க்கும் குடியிருப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!