Latestமலேசியா

சுல்தானா ரோகாயா அறக்கட்டளையின் புதிய அறங்காவலராக டத்தோ ஜீவேந்திரன் ராமநாயுடு நியமனம்

ஜோகூர் பாரு, அக்டோபர்-31 – சுல்தானா ரோகாயா அறக்கட்டளையான YSR-ரின் புதிய அறங்காவலர் குழு உறுப்பினராக டத்தோ ஜீவேந்திரன் ராமநாயுடு நியமிக்கப்பட்டுள்ளார்.

அறக்கட்டளையின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற அதன் தலைவர் டத்தோ சுகுமாரன் ராமன், இந்த நியமனத்தை வரவேற்றுள்ளார்.

ஜீவேந்திரனின் தலைமைத்துவத்தைப் பாராட்டிய அவர், இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்ற DHRRA Malaysia அமைப்பின் தலைவர் டத்தோ சரவணன், மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார நிலை மற்றும் ஜோகூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் குறித்து விளக்கமளித்தார்.

மேலும், ஜோகூர் இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான 5 முக்கிய அம்சங்களைக் கொண்ட வியூகக் கட்டமைப்பையும் அவர் முன்வைத்தார்.

எதிர்காலத்தில் இரு அமைப்புகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் டத்தோ சுகுமாரன் தமது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!