Latestமலேசியா

தீபாவளியை முன்னிட்டு உயர்கல்வி மாணவர்களுக்கு 9 நாட்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க அனுமதி!

பெட்டாலிங் ஜெயா, அக்-30 – தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அரசாங்கப் பல்கலைக்கழகங்கள், பலதொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் சமூகக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் விரிவுரையாளர்களும் நவம்பர் 5 முதல் 13ஆம் தேதி வரை சொந்த ஊர்களுக்குத் திரும்பி, இணையவழி அல்லது Hybrid எனும் நேரடி மற்றும் இணையவழி இணைந்த வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.

தீபாவளியைக் கொண்டாடும் மாணவர்களும் விரிவுரையாளர்களும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இணையவழி அல்லது கலப்பு முறையிலான வகுப்புகளை நடத்துவது, அந்தந்த உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத் தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையும் என அமைச்சு விளக்கியுள்ளது.

இதன் மூலம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளும் கல்வி அட்டவணையும் பாதிக்கப்படாமல், தீபாவளிப் பண்டிகையையும் குடும்பத்தினருடன் கொண்டாட வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதாக அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!