Latestமலேசியா

அனைத்துலக இளையோர்களுக்கான புத்தக்கப் போட்டியில் தேசிய வகை சிகாம்புட் தமிழ்ப்பள்ளி சாதனை

கோலாலம்பூர், மே 29 – புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க பெரியவர்களால் மட்டுமல்ல, இளையோராலும், சிறுவர்களாலும் முடியும் என்பதற்கு எத்தனையோ முன்னுதாரணங்களை உள்ளன.

அவ்வகையில் மாணவர்களின் உத்திகளை அவ்வப்போது தூண்டி, அவர்களின் பயனுள்ள புத்தாக்கங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர, பல அறிவியல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அவற்றில் ஒன்றுதான், கடந்த 16, 17, 18 ஆம் திகதிகளில் நடைபெற்ற அனைத்துலக இளையோர்களுக்கான புத்தக்கப் போட்டி.

இப்போட்டியில் கோலாலம்பூரைச் சேர்ந்த தேசிய வகை சிகாம்புட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

10 நாடுகளிலிருந்து ஏறக்குறைய 700க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் 8 வயது முதல் 11 வயதுடைய சிகாம்புட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றியை தன் வசமாக்கியுள்ளனர்.

ஆசிரியர் ஆனந்தி, தேவிகா மற்றும் மோகன சுந்தரி தலைமையில் பயிற்சி பெற்ற அக்குழுக்கள் IoT எனும் ஸ்மார்ட் சென்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாலின் அளவை கண்டுபிடிக்கும் புத்தாக்கத்தையும் எலி விரட்டும் கரிம தெளிப்பையும் சுயமாக உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!