
அமெரிக்கா, செப்டம்பர் 30 – அமெரிக்க மற்றும் இந்திய பொருளாதார உறவில் முக்கிய முதலீடாக, இந்தியாவின் எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான Mesabi Metallics நிறுவனம், அமெரிக்காவின் Iowa மாநிலத்தில் புதிய எஃகு ஆலையை அமைக்க 15 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யவுள்ளது.
இந்த ஆலை முழுமையாக செயல்படத் தொடங்கியதும் ஆண்டுக்கு 1 கோடி டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். ஆரம்ப கட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 75 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1,750 நிரந்தர வேலைவாய்ப்புகளும், கட்டுமானப் பணிகளின்போது 6,000 வேலைவாய்ப்புகளும் உருவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்திக்குத் தேவையான இரும்புத் தாது Minnesota மாநிலத்திலுள்ள Mesabi Metallics சுரங்கத்திலிருந்து பெறப்படும்.
Iowa எஃகு ஆலை மற்றும் Minnesota சுரங்கத் திட்டம் ஆகியவற்றைச் சேர்த்து மொத்த முதலீடு சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர் என Essar Group தெரிவித்துள்ளது.



