Latestஅமெரிக்காஉலகம்

அமெரிக்காவில் வீட்டின் சுவரை உடைத்துக்கொண்டு புகுந்த டெஸ்லா கார்; 76 வயது மூதாட்டி பரிதாப பலி

அங்காரா, ஜூன்-22-அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில், autopilot எனும் தானியங்கி வசதியில் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் டெஸ்லா கார், ஒரு வீட்டின் மீது மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரு குடியிருப்புப் பகுதி வழியே அதிவேகமாகச் சென்ற டெஸ்லா Model-3 இரக கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் செங்கல் சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.

​இந்த அதிர்ச்சிச் சம்பவத்தின்போது, வீட்டின் முன் அறையில் நின்றுகொண்டிருந்த 76 வயது Martha Avila என்ற மூதாட்டி கார் மோதி பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய 44 வயது ஓட்டுநர் Michael Butler-ரும் காயமடைந்தார்.

அவர் மதுபோதையில் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

​விபத்து நடந்த சமயத்தில் கார் ‘தானியங்கி ஓட்டுநர் உதவி’ (Automated driving assistance) முறையில் இருந்ததாக ஓட்டுநர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!