
புதுடில்லி, பிப் 2 – அடுத்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய அமெரிக்க பெண்ணான Nikki Haley (நிக்கி ஹாலே ) போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளார். அமெரிக்க அதிபராக டோன்ல்ட் டிரம்ப் இருந்தபோது ஐ.நாவுக்கான அமெரிக்காவின் தூதராக ஹலே இருந்துள்ளார். பிப்ரவரி 15ஆம்தேதி தொடங்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கான பிராச்சாரம் தொடங்கவிருக்கிறது. 51 வயது Halley இதற்கு முன் தென் கரோலினா மாநில கவர்னராகவும் இருந்துள்ளார். டோனல்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது வெளியுறவு கொள்கை உட்பட பல்வேறு விவகாரங்களுக்கு Halley ஆதரவாக இருந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டால் தாம் அதிபர் பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் நிற்கப்போவதில்லையென Halley கூறியிருந்தார். ஆனால் இப்போது தமது முடிவை அவர் மாற்றிக்கொண்டுள்ளார்.