Latestஇந்தியா

அமெரிக்க நிதி பெறும் CJP; டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி எனப் பாடகி மேரி மில்பென் குற்றச்சாட்டு

புதுடில்லி, அக்-15-டெல்லியில் நடைபெறும் போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டுச் சதி இருப்பதாகக அமெரிக்கப் பாடகி Mary Millben குற்றம் சாட்டியுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட ‘Cochroach Janata Party ‘ (CJP) எனும் அரசியலைக் கிண்டல் செய்யும் அமைப்புக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சில நன்கொடையாளர்கள் நிதியுதவி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகவும், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி CJP மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அப்போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டுச் சக்திகள் இருப்பதாக Millben குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சில நன்கொடையாளர்கள், பழமைவாதத் தலைவர்களைக் குறிவைத்து, அமெரிக்காவில் கல்வி பயின்றவர்களைத் தங்கள் சொந்த நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தப் பயன்படுத்துவதாக அவர் ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார். இத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகளின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

CJP நிறுவனர் Abhijeet Dipke, அமெரிக்காவின் Boston பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தை விமர்சிக்கும் அவரது கிண்டல் பதிவுகள் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதனிடையே, இந்தியாவில் ஆட்சியைச் சீர்குலைக்க வெளிநாட்டுச் சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ள மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என Millben கேட்டுக் கொண்டார். இளைஞர்கள் ஒன்றிணைந்து அமைதியான முறையில் செயல்பட்டு, ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Millben, இந்தியாவின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2023-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது அவர் இந்திய தேசிய கீதத்தையும் பாடியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!