Latestமலேசியா

அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிகை அதிகரித்தது பாஸ் சாடல்

கோலாலம்பூர். டிச 12 – தமது அமைச்சரவை சிறிய எண்ணிக்கையை கொண்டதாக இருக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய வாக்குறுதி என்னவானது என எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியது.

தற்போதைய அமைச்சரவை பட்டியலை பார்க்கும்போது நிர்வாக திறனை மேம்படுத்துவதற்கு பதிலாக அதிகாரத்தை பாதுகாப்பதில் தான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முன்னுரிமை வழங்கியிருப்பது தெரியவருவதாக பாஸ் கட்சி கூறியுள்ளது.

மக்களின் பணத்தை விரயமாக்கும் வகையில் பெரிய அளவிலான அமைச்சரவை இப்போது உருவாக்கப்பட்டுள்ளதாக பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சரவை பட்டியலில் தற்போது முழு அமைச்சர்களின் எண்ணிக்கை 28லிருந்து 31ஆக உயர்ந்துள்ளது. துணையமைச்சர்களின் எண்ணிக்கையும் 27லிருந்து 29ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டு மொத்தத்தில் அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 60ஆக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!