Latestமலேசியா

‘அல்லா’ காலுறைகளை விநியோகம் செய்த தொழிற்சாலை ; இன்று தொடங்கி மூடப்படுகிறது

பத்து பஹாட், மார்ச் 20 – “அல்லா” என்ற வாசகம் எழுதப்பட்ட காலுறைகளை விநியோகம் செய்ததால் சர்ச்சையில் சிக்கிய தொழிற்சாலை, போலீசார் சோதனை மேற்கொண்ட ஒரு நாளுக்கு பின்னர், இன்று நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டுள்ளது.

ஸ்ரீ காடிங் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த அந்த தொழிற்சாலை, தனது ஊழியர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிவு மற்றும் தொழிற்சாலை எரிக்கப்படும் எனும் அச்சுறுத்தல்களை தொடர்ந்து, மூடப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொழிற்சாலை நுழைவாயிலில், அது தொடர்பான அறிவிப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் தொழிற்சாலை நிர்வாகம் மீண்டும் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும், அந்த தொழிற்சாலை மீண்டும் எப்போது செயல்படத் தொடங்கும் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

நிலையை தணிக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

நேற்று அந்த தொழிற்சாலையில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட, பத்து பஹாட் போலீசார், அல்லா வாசகம் பதிக்கப்பட்ட ஐந்து காலுறைகளை பறிமுதல் செய்தனர். அந்த காலுறைகள் கேகே சூப்பர்மாட்டிலிருந்து திரும்ப அனுப்பப்பட்டவை ஆகும்.

எனினும், சோதனையின் போது தொழிற்சாலையிக் இருந்த 16 மூட்டைகளில் இருந்து, அல்லா வாசகம் பதிக்கப்பட்ட காலுறை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!