Latestமலேசியா

அல் குர்ஆன் உரை பிரசுர சட்டத்தை மீறிய இலக்கவியல் கடிகாரங்களை உள்துறை அமைச்சு பறிமுதல் செய்தது

கோலாலம்பூர், நவ, 30 – உள்துறை அமைச்சின் அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் சிலாங்கூரில் உள்ள பத்துமலையில் உள்ள ஒரு வளாகத்தில் மின் வர்த்தக விற்பனை நோக்கத்திற்காக பொருட்களை சேமித்து வைக்கும் கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனயில் “audio 30 juzu’ Al-Qur’an” அல்லது அல்-குர்ஆனின் பல வசனங்களைக் கொண்ட 703 இலக்கவியல் கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தனர் . இது தொடர்பாக மேல் விசாரணைக்கான இரண்டு ஆடவர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர். பல்வேறு வடிவங்களில் அல்-குர்ஆனின் எந்தவொரு பிரசுரமும் இந்த நாட்டில் விநியோகிக்கப்படுவதற்கு அல்லது விற்கப்படுவதற்கு முன் முதலில் உள்துறை அமைச்சின் சான்றிதழைப் பெற வேண்டும். உள்துறை அமைச்சின் சான்றிதழைப் பெறாத அல்-குர்ஆனில் பிழைகள் இருப்பதாகவும், அதன் உச்சரிப்பு மற்றும் வாசிப்பு மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் என்றும் அஞ்சப்படுகிறது, ஏனெனில் அது தவறான அர்த்தங்களைக் கொண்டு வரும் என உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!