Latestமலேசியா

ஆசியா மொபிலிட்டி மீதான சர்ச்சை ; கருத்துரைக்க ஹன்னா மறுப்பு

புத்ராஜெயா, மே 31 – சிலாங்கூர் மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை நிர்வகிப்பதற்காக, மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட, தனது கணவருடன் தொடர்புடைய நிறுவனம் குறித்த சர்ச்சை தொடர்பில் கருத்துரைக்க, இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ மறுத்துவிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் பொது போக்குவரத்துச் சேவைகளை நிர்வகிக்க ஏதுவாக நியமிக்கப்பட்ட இரு நிறுவனங்களில், ஆசியா மொபிலிட்டி நிறுவனமும் ஒன்றாகும்.

எனினும், ஹன்னாவின் கணவரான எம்.ராமசந்திரன் தலைமையிலான ஆசியா மொபிலிட்டி நிறுவனம் தேர்வுச் செய்யப்பட்டதில், சிறப்பு சலுகை அல்லது முரண்பாடுகள் எதுவும் இருக்கலாம் எனக் கூறி சில தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

“இது இளைஞர் விளையாட்டு அமைச்சின் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சிக்கும் அவ்விவகாரத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை” என அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஹன்னா கருத்துரைக்க மறுத்துவிட்டார்.

விளையாட்டுத் துறை குறித்த விரிவான தகவல்களை வழங்கும் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்களிப்பை அளவிடும் “2022 ஸ்போர்ட் சேட்டிலைட்” கணக்கை திறந்து வைத்த பின்னர் ஹன்னா செய்தியாளர்களிடம் பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!