
கோலாலம்பூர், நவ 21 – கோலாலம்பூர் , ஜாலான் அம்பாங் கிரியிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 300,000 ரிங்கிட்டிற்கும் கூடுதலான மதிப்புள்ள ஷாபு போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார் ஒரு பெண் உட்பட அறுவரை கைது செய்தனர். இவர்களில் இந்த கும்பலின் தலைவன் என நம்பப்படும் இந்தோனேசிய ஆடவரும் அடங்குவார் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ அல்லாவுடீன் அப்துல் மஜித் தெரிவித்தார். வெள்ளிக்கிழமையன்று அந்த ஆடம்பர அடுக்கு மாடியில் கீழ்த்தளத்திலும் வீடு ஒன்றிலும் கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 10 கிலோ ஷாபு பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த சோதனையின்போது 280,000 ரிங்கிட் மதிப்புடைய மூன்று வாகனங்கள் உட்பட விலையூர்ந்த பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அல்லாவுடீன் கூறினார். கைது செய்யப்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த ஐந்து ஆடவர்கள் போதைப் பொருள் தொடர்பான குற்றப் பின்னணியை கொண்டவர்கள் என அவர் தெரிவித்தார்.