Latest
ஆத்திரத்தில் போலீசாரை திட்டி வீடியோ எடுத்த இளைஞர் கைது

கோலாலம்பூர், ஜூன்-10-கோலாலம்பூரில், போக்குவரத்து விதிமீறலுக்காக சம்மன் பெற்றதில் கோபமடைந்த 25 வயது இளைஞர் ஒருவர், போலீசாரை திட்டியபடி வீடியோ பதிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
சம்மன் வழங்கிய போலீஸ் அதிகாரியிடம் அவர் ஆபாசமாக பேசியதுடன், சண்டைக்கு தூண்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
போலீசார் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவரைக் கைது செய்து, சம்பவத்துடன் தொடர்புடைய கைபேசியையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணைக்காக அவர் மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆரம்ப விசாரணையில், சம்மன் வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்து வீடியோ எடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.



