Latestஉலகம்சினிமா

ஆஸ்கார் அகாடமி நூலகத்துக்குப் போன ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதை; ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை, மே-24 – ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் – எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பார்க்கிங்’ பிரச்னையைப் பற்றி பேசியிருந்த ‘பார்க்கிங்’ படத்திற்கு ஆஸ்கார் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதையை ஆஸ்கார் அகாடமி கேட்டு வாங்கி தனது நூலகத்தில் வைத்துள்ளது.

இது அப்படக்குழுவினரை மட்டுமின்றி தமிழ் திரைப்பட ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அத்தகவலை தனது X தளத்தில் பகிர்ந்த நடிகர் ஹரிஷ் கல்யாண், ஒரு நல்ல கதை அதற்குரிய இடத்தில் போய் சேர்ந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

அன்றாட வாழ்வில் மிக முக்கியப் பிரச்னைகளில் ஒன்றான ‘பார்க்கிங்’ குறித்து பேசிய அப்படம் ரசிகர்கள் மத்தியிலும் சினிமா விமர்சர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படத்தை ஆஸ்காரும் அங்கீகரித்திருப்பது கோலீவூட்டில் பேசும் பொருளாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!