Latestஉலகம்

ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் விமானம் பறக்கும் போது ஆலங்கட்டி மழையால் மோசமாக சேதமடைந்தது

வியன்னா , ஜூன் 11 – ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆலங்கட்டி மழையால் மோசமாக சேதமடைந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த விமானம் இடியுடன் கூடிய புயல் செல் மீது மோதியதாக ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 173 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் ஸ்பெயினில் உள்ள Palma De Mallorca விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் ஆஸ்திரியாவின் வியன்னாவுக்குச் (Vienna) சென்றபோது ஆலங்கட்டி மழையினால் சேதம் அடைந்தபோதிலும் அந்த விமானம் வியன்னாவில் பத்திரமாக தரையிறங்கியது. அந்த விமானத்தின் மூக்குப் பகுதி கடுமையாக சேதம் அடைந்ததோடு விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததாகவும், விமானி அறையின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதாகவும் சமூக ஊடகங்கள் காணொளி வெளியிட்டுள்ளன.

புயல் செல் என்பது மேல் மற்றும் கீழ் வரைவுகளைக் கொண்ட ஒரு காற்று நிறை ஆகும். இதனை எதிர்நோக்கும் விமானம் கொந்தளிப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகும். ஏர்பஸ் 320 விமானம் வியன்னாவை நெருங்கும் போது இடியுடன் கூடிய செல்லில் சிக்கியது. விமான அறையின் பணியாளர்களின் தகவலின்படி , வானிலை ராடாரில் இது தெரியவில்லை என்று ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. கடந்த மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ321 விமானம் கடுமையான கொந்தளிப்பில் சிக்கியபோது அவ்விமானத்தின் பயணி ஒருவர் இறந்ததோடு 70- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதே வாரத்தின் பிற்பகுதியில், Doha- விலிருந்து டப்ளினுக்கு ( Dublin) சேவையில் ஈடுபட்டிருந்த Qatar Airway விமானத்தில் பயணம் செய்த 12 பேர் காயமடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!