Latestமலேசியா

இணையதாள ‘ஸ்விங்கர்’ செயல்பாடுகள் முறியடிப்பு; எம்.சி.எம்.சி & போலிஸ்

சைபர்ஜெயா, ஏப்ரல் 4 – கணவன் மனைவியை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்வதை உள்ளடக்கிய ‘ஸ்விங்கர்’ குழுவின் நடவடிக்கைகளை, மலேசியா ராயல் போலீசுடன் இணைந்து மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷனால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து கெடா மற்றும் ஜோகூரில் இந்த செயல்பாடு கண்டறியப்பட்டதாக எம்.சி.எம்.சி தெரிவித்துள்ளது.

39 முதல் 50 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் ‘ஸ்விங்கர்’ குழுவின் X தளத்தின் நிர்வாகிகளாகச் செயல்படுவதும், லாபம் ஈட்டுவதற்காக ஆபாசக் காணொளிகளை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டது.

X இணையத்தளம் வழி குறுகிய வீடியோ கிளிப்களை பதிவேற்றுவது இந்த சந்தேக நபர்களின் வழக்கமாகும். இந்நிலையில், அந்த முழு காணொளியைப் பெற விரும்புபவர்களிடம், RM100 ரிங்கிட் முதல் RM400 ரிங்கிட் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு, பின் டெலிகிராமில் அது அனுபிவிக்கப்படுமாம்.

இதனிடையே, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் இந்த குற்றச் செயல் நிரூபிக்கப்பட்டால் RM50,000 ரிங்கிட் அபராதமும், ஓர் ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!