Latestமலேசியா

இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டு கடனுதவித் திட்டம்; பேங்க் ராக்யாட் RM50 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர், மே 5 – இந்திய தொழில்முனைவர்கள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் இன்னும் ஆக்கரமான பங்களிப்பை செய்யவதோடு தங்கள் வணிகத்தை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் எனும் நோக்கில் பேங்க் ராக்யாட் RM50 மில்லியன் ஒதுக்கீட்டில் பிரத்தியேகமாக இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டு கடனுதவி, BRIEF-i திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த நிதி திட்டம் குறிப்பாக நாட்டில் உள்ள இந்திய தொழில்முனைவர்களின் குறு, சிறு மற்றும் நடுத்தரம் எனும் PMKS நிறுவனங்களின் விரிவாக்கம், மற்றும் மூலதனச் செலவினங்களுக்கு உதவும் நோக்கில் ஒதுக்கப்பட்டுள்ளதாக இத்திட்டத்தை தொடக்கி வைத்த தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துணையமச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

இத்திட்டம் டத்தோ ரமணனின் சிந்தனையில் உருவான ஒன்று என தமதுரையில் தெரிவித்தார் பேங்க் ராக்யாட் தலைவர் டத்தோ முகமட் இர்வான்.

இந்த BRIEF-I எனும் கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகளையும், அதன் பல்வேறு நன்மைகளையும் ரமணன் விளக்கினார்.

இந்திய தொழில் முனைவர்கள் பயன்பெறும் வகையில் தொழில் முனைவர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் கீழ் மற்றொரு திட்டமாக அறிமுகமான இந்த கடனுதவி திட்டத்தை குறித்து இன்று பேங்க் நெகாரா இரட்டை கோபுரத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

பேங்க் ரக்யாட்டின் இத்திட்டம் மலேசிய சமூகப் பொருளாதாரத்தில் இந்தியர்களுமு உயர வேண்டும் என்பதற்கான முனைப்பை வெளிப்படுத்துகிறது. அதே வேளையில் வறுமையை ஒழிப்பதிலும் மலேசியாவின் பொருளாதாரத்தில் இடைவெளியை குறைப்பதற்கும் இத்திட்டம் வழிவகுக்கும் எனவும் டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, இந்த அறிமுக விழாவில் பேங்க் ரக்யாட்டின் தலைவர் டத்தோ முகமத் இர்வான், பேங்க் ரக்யாட்டின் தலைமை செயல் அதிகாரி Mohammad Hanis Osman, அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் ஸ்ரீ சூரியானி, துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலர் கலந்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!