Latestஉலகம்

இந்திய நாடாளுமன்ற தேர்தல்; 290 தொகுதிகளில் பி.ஜே.பி முன்னிலை, காங்கிரஸ் 231 இடங்களில் முன்ணணி

புதுடில்லி, ஜூன் 4 – இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலையில் தொடங்கின. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி இதுவரை 290 தொகுதிகளில் முன்னணியில் இருந்து வருகிறது. பாரதீய ஜனதா கட்சிக்கு மிரட்டலை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி 228 தொகுதிகளில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை நான்கு சுற்றுக்கள் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதால் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். பிற கட்சிகளில் 20 இடங்களில் முன்னணியில் உள்ளன.

தமிழ் நாடு , புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளில் முன்னணியில் உள்ளன. அதிமுக 1 தொகுதியிலும் தமிழகத்தில் தருமபுரி தொகுதியில் பஜக கூட்டணி வேட்பாளரான சௌம்யா அன்புமணி முன்னணியில் இருந்து வருகிறார்.

அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்னும் அதிக சுற்றுக்களில் வாக்குகளில் எண்ணப்பட வேண்டியுள்ளதால் முழுமையான முடிவுகள் வெளிவருவதற்கு இன்று இரவு ஏழு மணியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்திய மாநிலங்களில் கடந்த தேர்தலில் பா.ஜ.காவின் கோட்டையாக இருந்த உத்தர பிரதேசம் , மகராஸ்டிரம், குஜராத், ராஜஸ்தான், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் இம்முறை பின்னடைவை சந்தித்துள்ளது. தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்பில் பாஜக 400 தொகுதியை பெறும் என்ற கருத்துக் கணிப்பு தற்போது தவிடு பொடியாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!