Latest

இன்று பெனாந்தி அருகே 12 வாகனங்கள் மோதி விபத்து; 7 கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல்

பினாங்கு, மே 5 – இன்று காலையில் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து லூனாசிலிருந்து குபாங் செமாங் / செபெராங் ஜெயா செல்லும் சாலையில் இன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Penantiக்கு அருகே 12வது கிலோமீட்டரில் பல மோட்டார் சைக்கிள்கள் உட்பட 12 வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தினால் சுமார் 7 கிலோமீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் சாலையில் வாகனமோட்டிகள் ஐந்து மணிநேரத்திற்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் பலர் தாமதமாகவே வேலைக்கு செல்லும் சூழ்நிலைக்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!