Latestமலேசியா

இருதய அறுவை சிகிச்சை மீதான முதுகலை பயிற்சி தொடர்பாக அமைச்சரவையில் முன்மொழிவு தீர்மானம் சமர்ப்பிக்கப்படும்

கோலாலம்பூர், மே 30 – Parallel Pathway Program எனப்படும் இருதய அறுவை சிகிச்சையில் முதுகலை பயிற்சியை பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு திறந்து விடுவதும் மற்றும் மாரா தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தை பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு திறப்பதும் இரண்டு வெவ்வேறு சிக்கல்கள் என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் Zambry Abdul Kadir தெரிவித்திருக்கிறார். சில தரப்பினர் சூழ்நிலையின் சாதகத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் உண்மையான பிரச்னை என்னவென்றால், இந்த மாணவர்களுக்கு MMC எனப்படும் மலேசிய மருத்துவ மன்றத்தின் அங்கீகாரம் கிடைப்பதில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பான ஒரு விரிவான முன்மொழிவு தீர்மானம் தயாரிக்கப்பட்டு ஜூன் 5 ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இருதய அறுவை சிகிச்சைக்கான நிபுணத்துவ உயர்நிலைப் பயிற்சித் திட்டம் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஏப்ரல் மாதத்தில் தனது அமைச்சிற்கும் சுகாதார அமைச்சிற்குமிடையே நடந்த கூட்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக Zambry விளக்கம் தெரிவித்தார். இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் பற்றாக்குறையால் அரசாங்க மருத்துவமனைகளில் இருதயம் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமர் 1,500 பேர் மிகவும் சிரமத்தில் இருப்பதாக கடந்த மார்ச் மாதம் ஊடகத்தில் தகவல் வெளியானது. தற்போது சுகாதார அமைச்சில் 14 இருதய நிபுணர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக கடந்த மார்ச் மாதம் Dzulkefly மக்களவையில் கூறியிருந்தார். Edinburg கிலுள்ள Royal College of Surgeons கல்லூரியில் இருதய அறுவை சிகிச்சை பயில்வதற்காக அரசாங்கம் அனுப்பிய மலேசிய பட்டதாரிகள் இங்கு பணியாற்ற முடியவில்லை. அவர்களது கல்வியை மலேசிய மருத்துவ மன்றம் அங்கீகரிக்காததே இதற்கான காரணம் என Zambry விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!