Latestமலேசியா

இரு காவலர்களைத் தாக்கியதாக AKPS தலைமை இயக்குனர் Shuhaily மீது நாளை குற்றச்சாட்டு

கோலாலம்பூர், அக்- 20-இரு காவல் வீரர்களைத் தாக்கியதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS தலைமை இயக்குநர் Datuk Seri Shuhaily Mohd Zain மீது நாளை சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறது.

செப்டம்பர் 28ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முதல் முனையத்தில் இரு காவல் வீரர்களுக்கு காயம் ஏற்படுத்தியதாக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323-இன் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்படவுள்ளது.

தேசிய சட்டத்துறை அலுவலகம் AGC, விசாரணை ஆவணங்களை மேலதிக நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் திருப்பி அனுப்பியிருப்பதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail கடந்த அக்டோபர் 17ஆம் தேதி கூறியிருந்தார்.

அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்கும் முன், விசாரணை ஆவணங்களில் சில மேம்பாடுகளைச் செய்யுமாறு AGC கோரியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

விசாரணை ஆவணங்களில் சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. வழக்கு தொடர்வது தொடர்பான முடிவை எடுப்பதற்கு முன், விசாரணை முடிவுகளில் AGC முழுமையாகத் திருப்தியடைய வேண்டியது அவசியம் என்றும் Saifuddin குறிப்பிட்டிருந்தார்.

அதனை அடுத்து அது கோரியுள்ளதற்கு ஏற்ப விசாரணையை நிறைவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!