Latestமலேசியா

இறுதி ஊர்வலத்தின் போது சாலையில் பட்டாசு கொளுத்திய ஆடவர் பந்திங்கில் கைது; 2 சகாக்களுக்கும் வலை வீச்சு

பந்திங், மார்ச் 29 – சிலாங்கூர் பந்திங்கில் இறுதி ஊர்வலத்தின் போது சாலையில் பட்டாசு வெடித்த ஆடவர் கைதாகியுள்ளார்.

கார் பட்டறை உதவியாளரான
28 வயது அந்நபர், பந்திங்கில் புதன்கிழமை பிற்பகல் வாக்கில் கைதானதாக குவாலா லங்காட் போலீஸ் தலைவர் Supt Ahmad Ridhwan Mohd Nor @ Saleh தெரிவித்தார்.

இறுதி ஊர்வலத்தில் இன்னும் சில மோட்டார் சைக்கிளோட்டிகளோடு பங்கேற்ற அந்நபர், வாகனங்களை நிறுத்தச் செய்து சாலையில் பட்டாசுகளைக் கொளுத்தியிருக்கின்றார்.

அச்செயலுக்காக போக்குவரத்துக் குற்றங்கள் அடிப்படையில் அவருக்கு உடனடியாக 3 சம்மன்கள் வெளியிடப்பட்டன.

குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காகவும் போதைப்பொருள் எடுத்துக் கொண்டதற்காகவும் அவ்வாடவர் ஏற்கனவே குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தின் போது அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் பின்னர் உறுதிச் செய்யப்பட்டது.

பட்டாசு கொளுத்திய போது உடனிருந்த அவரின் இரு சகாக்களும் தேடப்பட்டு வருகின்றனர்.

அச்சம்பவம் 1957 வெடிப்பொருட்கள் சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறையும் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்க அச்சட்டம் வகைச் செய்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!