Latestமலேசியா

இளம் பெண்ணை கற்பழித்து, கொலை செய்த ஆடனுக்கு மரண தண்டனை

புத்ரா ஜெயா, மே 29 – கெடாவில்  2006 ஆம் ஆண்டு  ஜனவரி   14ஆம் தேதி சுங்கைப் பட்டாணி ,  Kelab Cinta Sayang கிற்கு அருகே சந்தை நிர்வாகியான Chee Gaik  Yap என்ற  25 வயது இளம் பெண்ணை பாலியல் பலத்காரம்  செய்த பின் கொடூரமாக கொலை செய்த  டத்தோ  பிரமுகரான தொழில் அதிபரின்  மகனான   43 வயதுடைய   Sharil Jaafar  என்ற ஆடவனுக்கு  விதிக்கப்பட்ட மரண தண்டனையை இன்று கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது.  

Datuk Harmindar Singh Dhaliwal , தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த   Datuk Nordin Hassan  ,   Datuk Abu Bakar Jais   ஆகியோர் Sharil Jaafar ரின்  மேல் முறையீட்டை ஏகமனதாக   நிராகரித்தனர்.   

பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு வழிவகுத்த வழக்கின் உண்மைகள் வழக்கத்திற்கு மாறானது. பாதுகாப்பான இடமாக கருதப்படும்  பொது இடத்தில் பட்டப் பகலில் கற்பழிப்பு மற்றும் ஓரிணப் புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு இளம் பெண்  கொலை செய்யப்பட்டுள்ளார். 

அவரது  உடலில்  50 காயங்கள் இருந்துள்ளதால்  குற்றஞ்சாட்டப்பட்ட நபர் செய்து கொண்ட மேல் முறையீடு  தள்ளுபடி செய்யப்பட்டு மரண தண்டனை   நிலைநிறுத்தப்படுவதாக நீதிபதி  டத்தோ Harmindar singh  தீர்ப்பளித்தார்.    Chee Gaik Yap பை  கொலை செய்த குற்றத்திற்காக  கடந்த  2015ஆம் ஆண்டு  ஆகஸ்டு   9 ஆம் தேதி  அலோஸ்டார்   உயர் நீதிமன்றம்   Sharil குற்றவாளி என தீர்பளித்து அவனுக்கு மரண தண்டனையை விதித்தது.   

பயிற்சிக்காக  ஜெர்மனிக்கு செல்லவிருந்த    Chee  தனது உடன்பிறப்போடு  பொது பூங்காவில்    மெது ஓட்டத்தில் ஈடுபட்டிந்த பின்  கடத்தப்பட்டு  பாலியல்  கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ளார், கொலையாளி   ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடி  மூன்று ஆண்டுகளுக்கு பின்   திரும்பியபோது   KLIA விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். எனவே அவனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என அரசாங்க தரப்பு வழக்கறிஞர்  டி.பி.பி டத்தோ  Mohd  Dusuki  Mokhtar  இதற்கு முன்   நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!